ஈரோடு (ஆங்கிலம்:Erode), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கும் மாநகராட்சி ஆகும்.
இது 11 ° 19.5 "மற்றும் 11 ° 81,05" வடக்கு அட்சரேகை மற்றும் 77 இடையேயும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து தென்மேற்கு திசையில் 400 கிலோமீட்டர் (249 மைல்) தொலைவிலும் காவிரி மற்றும் பவானி ஆறுகளின் நதிக்கரையிலும், தென்னிந்திய தீபகற்பத்தின் மையத்திலும் அமைந்துள்ளது.11 ° 42.5 "மற்றும் 77 ° 44.5" கிழக்கு தீர்க்க கொண்டது. இதன் இரட்டை நகரம், பள்ளிபாளையமானது, காவிரி நதியின் கிழக்கு கரையில் நாமக்கல் மாவட்ட அதிகாரத்தின் கீழ் அமைந்துள்ளது.
ஈரோடு கைத்தறி, விசைத்தறி ஜவுளி பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கு புகழ் பெற்றது. எனவே இது கைத்தறி நகரம் என்று அழைக்கப்படுகிறது.
உற்பத்தி ரகங்களான பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தரைப்பாய்கள், லுங்கிகள், அச்சிடப்பட்ட துணிகள், துண்டுகள், கால்சட்டைகள் போன்ற பொருட்களை மொத்தமாக இங்கே சந்தைப்படுத்தப்படுகின்றன. இது மஞ்சள் மாநகரமாகவும் (Turmeric City) மற்றும் ஜவுளி மாநகரமாகவும் (Textile City) திகழ்கிறது. ஈரோடு கொங்கு நாட்டில் ஒரு முக்கிய நகரமாக உள்ளது.
பொருளடக்கம்
புவியியல்
ஈரோடு பழைய நகராட்சி பகுதியில் (கோட்டை மற்றும் பேட்டை) 8.4 சதுர கிமீ பகுதியில் 151,184 மக்கள் என 2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பானது தெரிவிக்கின்றது.சுற்றிலும் அமைந்திருந்த மற்ற நகராட்சிகளின் ஒருங்கிணைப்புக்கு பின்னர், ஒருங்கிணைந்த மாநகரமாக 109.52 சதுர கி.மீ சுற்றவளவில் 5 லட்சம் பேர் வசிப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 ஆனது தெரிவிக்கிறது.
மக்கள்தொகையில் ஆண்கள் 49% மற்றும் பெண்கள் 51% பேர் வசிக்கின்றனர். தேசிய சராசரியான 59.5% யை விட அதிகமாக 78% சராசரி எழுத்தறிவு வீதத்தினை ஈரோடு பெற்றுள்ளது: ஆண் எழுத்தறிவு விகிதம் 83% மற்றும் பெண் எழுத்தறிவு 72% ஆகும். ஈரோடு மக்கள் தொகையில் 6 வயதுக்கும் கீழ் 9% உள்ளது.
இவ்வூரின் அமைவிடம் 11.35°N 77.73°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 183 மீட்டர் (600 அடி) உயரத்தில் இருக்கின்றது.
பெயர்க் காரணம்
நவீன வரலாற்றாசிரியர்கள் ஈரோடு எனும் சொல்லானது ”இரு ஓடை” எனும் இரட்டை சொற்களிலிருந்து வந்ததாகக் கூறுகின்றனர்.சூரம்பட்டியின் பெரும்பள்ளமும், பிராமண பெரிய அக்ரஹாரம் மற்றும் காசிபாளையத்தின் காளிங்கராயன் கால்வாய்ப் பகுதியும் தற்போது ஈரோடு மாநகராட்சிப்பகுதியின் எல்லைகளாகத் திகழ்கின்றன. ஆனால் பழைய ஈரோடு நகராட்சியில் கால்வாய்கள் ஏதுமில்லாமல் இருந்தது.
பைரவ புராண விளக்கவுரையில், சிவனின் மாமனாரான தட்சன், தாம் நடத்திய யாகத்திற்கு தமது மருமகனான இறைவன் சிவனை கூப்பிடவே இல்லை, அவரது மனைவி தட்சாயினி தமது கணவர் விருப்பத்திற்கு எதிராக யாகத்திற்கு வந்தாள், யாகத்தில் தமது கணவரை தந்தை இழிவுபடுத்தியதால் மனமுடைந்து திரும்பினாள். மேலும் அவள் சிவனிடம் திரும்பியபின் சிவன் கோபமுற்று தட்சாயினியை எரித்ததார் எனக்கூறுகிறது. அதை கேட்ட பிரம்மா தன் ஐந்தாவது தலையை துண்டித்தார். அந்த மண்டை ஓடு சிவனை ஒட்டிக்கொண்டு பிரம்மதோஷம் பிடித்தது. பிரம்மதோஷத்தின் காரணமாக சிவன் இந்தியா முழுவதும் சுற்றினார். அப்போது ஈரோடு வந்து போது இங்குள்ள கபால தீர்த்தத்தில் நீராடியதால் மண்டை ஓடு சிதைந்தது. இந்த மண்டை துணுக்குகள், ஈரோட்டினை சுற்றியுள்ள வெள்ளோடு (Vellode ("வெள்ளை மண்டை")), பேரோடு (Perode ("பெரிய மண்டை")) மற்றும் சித்தோடு (Chithode ("சிறிய மண்டை")) ஆகிய இடங்களில் விழுந்ததாக கூறுகிறது. அவற்றின் பெயர்களும் முன்னுதரணமாக அமைந்துள்ளன. கபால தீர்த்தமானது ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலின் இடதுபுறத்தில் உள்ளதை இன்றும் காணலாம். மேற்கண்டவாறு வரலாற்றினை பைரவ புராணமானது விளக்குகிறது. வைஷ்ணவர் அவதாரங்களில் குறிப்பிடத்தக்க அவதாரமான கூர்ம அவதாரத்திற்கான அடித்தளமாக இது திகழ்வதாக சான்றுகள் உள்ளன.
நன்றி,
தமிழ் விக்கிப்பீடியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக